சாத்வி ப்ரக்யா எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கிறார் - பாஜக

காணவில்லை போஸ்டர்களுக்கு பதில் அளித்துள்ள பாஜக, சாத்வி ப்ரக்யா எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கும், கண் பிரச்சனைக்கும் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

சாத்வி ப்ரக்யா எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கிறார் - பாஜக
பிரக்யா சிங் தாக்கூர்
  • Share this:
போபால் லோக் சபா எம்.பி சாத்வி ப்ரக்யா தாக்கூரை காணவில்லை என வெள்ளிக்கிழமை முதல் ஒட்டப்பட்ட காணவில்லை போஸ்டர்களுக்கு பதில் அளித்துள்ள பாஜக, சாத்வி ப்ரக்யா எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கும், கண் பிரச்சனைக்கும் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பிசி ஷர்மா முன்னதாக பேசியபோது, எம்.பி தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங் இந்தத் தொற்றுக் காலத்தில் மக்களுடன் நிற்பதாகவும், சாத்வி பிரக்யாவின் இருப்பைக் குறித்து கேள்வி கேட்க மக்களுக்கு அனைத்து விதமான உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்திருக்கும் பாஜக செய்தித் தொடர்பாளர் ராகுல் கோத்தாரி, புற்றுநோய்க்கும், கண் தொடர்பான பிரச்சனைக்கும் சாத்வி ப்ரக்யா சிகிச்சை எடுத்து வருகிறார். தொலைபேசி மூலம் தொற்று நடவடிக்கைகள் குறித்து பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சியில் இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading