• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • அமித் ஷா வாக்குறுதி: ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ - விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.18,000 செலுத்துவோம்

அமித் ஷா வாக்குறுதி: ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ - விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.18,000 செலுத்துவோம்

மம்தா பானர்ஜி, அமித்ஷா

மம்தா பானர்ஜி, அமித்ஷா

பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.18 ஆயிரம் செலுத்தப்படும் என்று மேற்குவங்காள தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தெரிவித்தார்.

  • Share this:
    பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.18 ஆயிரம் செலுத்தப்படும் என்று மேற்குவங்காள தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தெரிவித்தார்.

    கடந்த 2014 தேர்தலின் போது வெளிநாட்டில் பதுக்கியிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஓவ்வொரு இந்தியர் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று பாஜக வாக்குறுதியளித்ததை இன்னமும் மக்கள் மறக்காமல் பொய்த்துப்போன அந்த வாக்குறுதியை எள்ளி நகையாடி வருகின்றனர்.

    பிற்பாடு அப்படி வாக்குறுதி அளிக்கவே இல்லை என்றும் அதற்கு அர்த்தம் இதுவல்ல என்றும் பாஜக தலைவர்கல் மாறி மாறி பிளேட்டைத் திருப்பிப் போட்டனர்.

    இந்நிலையில் மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா, பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.18,000 செலுத்தப்படும் என்று வாக்குறுதியை அள்ளி வீசியுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த சூழலில் பக்முண்டி என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

    .ஜனதா ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.18 ஆயிரம் செலுத்தப்படும். தேர்தல் என்பது மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஆனால், மம்தா பானர்ஜியோ தன் மருமகனை அடுத்த முதல்-மந்திரியாக ஆக்குவதற்கு தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகிறார்.

    உங்களுக்கு நல்லத் திட்டங்கள் தேவையென்றால் பிரதமர் மோடியை மனதில் வைத்து பாஜகவுக்கு வாக்களியுங்கள். ஊழலை நீங்கள் விரும்பினால், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். இதை நீங்களே முடிவு செய்யுங்கள். மேற்கு வங்க மாநிலத்தி்ன் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 115 திட்டங்கள் கொண்டுவந்துள்ளார். ஆனால், மம்தா பானர்ஜி 10 ஆண்டுகளில் 115 ஊழல்கள் செய்துள்ளார். மாநிலத்தில் தற்போது ஊழல் நிறைந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.

    ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, பழங்குடியின மக்களையும், குருமி இனத்தவர்களையும் புறக்கணித்துவிட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், பழங்குடியினத்தவர், குருமி இனத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரப்படும்.

    குருமி சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு 10ம்வகுப்பு வரை அவர்கள் மொழியிலேயே பாடங்களை இலவசமாகப் படிக்கலாம். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் புர்லியா மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டத்தைக் கொண்டுவருவோம். இந்த மாவட்டத்தில் உள்ள ஜங்கிலிமஹால் பகுதியில் உறுதியாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித்தரப்படும், என்றார் அமித் ஷா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: