ராயபுரம் ஓட்டு மட்டும் வேணும்; இவரு மயிலாப்பூர்ல இருப்பார் - அமைச்சர் ஜெயக்குமாரை சாடும் திமுக வேட்பாளர் மூர்த்தி

ராயபுரம் ஓட்டு மட்டும் வேணும்; இவரு மயிலாப்பூர்ல இருப்பார் - அமைச்சர் ஜெயக்குமாரை சாடும் திமுக வேட்பாளர் மூர்த்தி

ராயபுரம் திமுக வேட்பாளர் மூர்த்தி

தினமும் சர்ச்சையாக பேட்டி கொடுப்பதை தவிர தொகுதி மக்களுக்கோ, மீனவ மக்களுக்கோ எந்தவிதமான நன்மையும் ஜெயக்குமார் செய்யப்போவதில்லை.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக பலப்பரீட்சை நடந்துகின்றன. சிட்டிங் எம்.எல்.ஏவான ஜெயக்குமார் அ.தி.மு.க சார்பில் மீண்டும் ராயபுரம் தொகுதியில் களம் காண்கிறார். தி.மு.க தரப்பில் ராயபுரம் தொகுதியில் திரையரங்க உரிமையாளரான ஐட்ரீம் மூர்த்தி களம் காண்கிறார். ராயபுரம் தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக ஜெயக்குமார் தேர்வாகியுள்ளார். இந்த முறை மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிப்பெறுவேன் என அடித்து சொல்கிறார் தி.மு.க வேட்பாளரான ஐட்ரீம் மூர்த்தி. நியூஸ்18 தமிழ் நடத்திய நேர்காணலில் மூர்த்தி இதனை தெரிவித்தார்.

    கேள்வி: ஜெயக்குமார் 25 வருடங்களாக இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கிறார். கடந்த தேர்தல்களில் இந்த தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு ஒதுக்கியதை பின்னடைவாக பார்க்கிறீர்களா?

    ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருக்கிறார் என்பதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அவருக்கு எதிராக களமிறங்கிய வேட்பாளர்கள்தான் காரணமே தவிர இதில் கட்சி காரணம் இல்லை. இந்தத் தொகுதியில் யாரை வேண்டுமானலும் கேளுங்கள். ஜெயக்குமார், லைட் போட்டுக்கொண்டு காரில் வருவார். இங்கிருப்பவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிடுவார் அவ்வளவுதான். ராயபுரம் தொகுதியில் எந்த விதமான வளர்ச்சி, நலத்திட்ட பணிகளையும் அவர் செய்யவில்லை.

    அமைச்சர் ஜெயக்குமார்


    ராயபுரம் பகுதியில் பிரதான சாலை என்பது சூரியநாராயண செட்டி தெருதான். அந்தத் தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அடைத்து இருக்கிறது. இந்த தொகுதிக்காக நான் இதை செய்தேன் என ஜெயக்குமாரால் ஒரு விஷயத்தை கூட சொல்ல முடியாது. தேர்தல் காலத்தில் சில இலவசங்களை கொடுத்துவிட்டு தொகுதிக்காக இதை செய்தேன் அதை செய்தேன் என்பார்.

    மீன்பிடித் தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணமாக கொடுக்கிறார்கள். நிவாரண தொகுதியை உயர்த்தி கொடுப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளேன். மீன்பிடித் தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் எனது முதல் பணியே தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடித் தடைகாலத்தில் 15,000 பெற்றுத் தரவேண்டும்.

    ஜெயக்குமாருக்கு ராயபுரம் மக்களின் ஓட்டுதான் வேண்டும். அவர்தான் மயிலாப்பூர் போய்விட்டாரே. இந்த முறை மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். தினமும் சர்ச்சையாக பேட்டி கொடுப்பதை தவிர தொகுதி மக்களுக்கோ, மீனவ மக்களுக்கோ எந்தவிதமான நன்மையும் அவர் செய்யப்போவதில்லை. ஜெயக்குமார் பேட்டி கொடுத்தே வாழ்ந்திடலாம் என நினைக்கிறார். ராயபுரம் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் எனக்கு இருக்கிறது’ என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: