உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத அரசியல்வாதி -அமைச்சர் ஜெயக்குமார்

உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாத அரசியல்வாதி -அமைச்சர் ஜெயக்குமார்

இளநீர் சீவும் அமைச்சர் ஜெயக்குமார்

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் கிழக்கு கல்மண்டபம் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடையில் அமர்ந்து இளநீர் வெட்டி வாக்கு சேகரித்தார்‌

 • Share this:
  தமிழக சட்டமன்றத்தேர்தலில் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் சைக்கிள் ரிக்‌ஷாவில் அவர் அமர்ந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராயபுரம் தொகுதிக்குட்பட்ட எம். எஸ்.கோவில் தெரு, வெங்கடாசலம் தெரு, கல்மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் ரிக்க்ஷாவில் அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயபுரம் பகுதி மக்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் வரவேற்பு அளித்தனர்.

  தேர்தல் பரப்புரையின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ ராயபுரம் தொகுதியில் என்னுடைய ரதமான சைக்கிள் ரிக்‌ஷாவின் அமர்ந்து வாக்கு சேகரித்து வருகிறேன். 10 நாட்களில் 520 தெருக்களில் வாக்கு சேகரித்துள்ளேன். இன்றுடன் என்னுடைய பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ராயபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் 100 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு உளறல் மன்னன். அவருடைய கட்சிக்கு அதுவே ஒரு பின்னடைவு இது தேர்தலில் பிரதிபலிக்கும்.

  அமைச்சர் ஜெயக்குமார்


  உதயநிதி ஸ்டாலின் பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். அவர் ஒரு பச்சிளம் குழந்தையைப் போல் செயல்படுகிறார். வருமான வரி துறைக்கு வரும் தகவலின் படி தான் சோதனை செய்கிறார்கள். மடியில் கணம் உள்ளதால் தான் தி.மு.க-வினர் பயப்படுகிறார்கள். ஊழலில் ஊறிய கட்சி தி.மு.க என்றும் குற்றம் சாட்டினர். முன்னதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் கிழக்கு கல்மண்டபம் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடையில் அமர்ந்து இளநீர் வெட்டி வாக்கும் சேகரித்தார்‌.’’

  செய்தியாளர் : அசோக்குமார்
  Published by:Ramprasath H
  First published: