• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ‘கேரளாவின் குஜராத்’: கேரளாவில் பாஜக களமாட அடித்தளம் அமைத்து தருமா நேமம்? : ஹெவிவெயிட் வேட்பாளர்கள் மோதும் நட்சத்திர தொகுதி!

‘கேரளாவின் குஜராத்’: கேரளாவில் பாஜக களமாட அடித்தளம் அமைத்து தருமா நேமம்? : ஹெவிவெயிட் வேட்பாளர்கள் மோதும் நட்சத்திர தொகுதி!

கேரள சட்டமன்ற தேர்தல் 2021

கேரள சட்டமன்ற தேர்தல் 2021

கடந்த தேர்தலில் 47.46% வாக்குகளுடன் நேமம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை மூத்த தலைவரும் முன்னாள் மிசோரம் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரன் நேமம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • Share this:
கேரளாவில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர்கள் மோதும் தொகுதிகளையும் கடந்து எதிர்பார்ப்பை தூண்டியிருக்கும் தொகுதி என்றால் அது நேமம் தான். இந்த தொகுதியில் மட்டும் தான் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றது. பொதுவாக கேரளாவில் திமுக, அதிமுக போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் விளங்குகின்றன. இந்த இரண்டு கூட்டணியும் தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்திருக்கின்றன. அப்படி இருக்க முதல் முறையாக இந்த இரண்டு கூட்டணியிலும் இல்லாத 3வது சக்தியாக பாஜக அங்கு ஒரு சீட்டில் வெற்றி பெற்றது.

கடந்த முறை நேமம் தொகுதியில் கிடைத்த வெற்றியை இந்த முறை மேலும் விஸ்தரிக்கும் நம்பிக்கையுடன் பாஜக இந்த முறை களமிறங்கி உள்ளது.

அதே நேரத்தில் பாஜகவை அடியோடு தூக்கி எறியும் நோக்கில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் என இரண்டு கூட்டணிகளுமே வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.

கடந்த தேர்தலில் 47.46% வாக்குகளுடன் நேமம் தொகுதியில் போட்டியிட்ட ராஜகோபால் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை மூத்த தலைவரும் முன்னாள் மிசோரம் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரன் நேமம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நேமம் தொகுதியை ‘கேரளாவின் குஜராத்’, அசைக்க முடியாத பாஜகவின் கோட்டை என்று கும்மனம் ராஜசேகரன் குறிப்பிடுகிறார்.

இருப்பினும் அதனை தவறு என்று பறைசாற்றி பாஜகவை வீழ்த்த சிபிஎம். காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. கும்மனம் ராஜசேகரனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பதவியில் உள்ள மக்களவை எம்.பி கே.முரளிதரனை நிறுத்தியுள்ளது. இவர் முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகன் ஆவார். நேமம் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தை சேர்ந்தவர். ஒரு கட்டத்தில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை நேமம் தொகுதியின் வேட்பாளராக்க காங்கிரஸ் தலைமை முயன்றது. இருப்பினும் உம்மன் சாண்டியின் சொந்த தொகுதியான புதுப்பள்ளியில் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் முரளிதரனை வேட்பாளராக்கியது காங்கிரஸ்.

நேமம் தொகுதியே பாஜக வெற்றி பெற்ற முதலும் மற்றும் கடைசியுமான தொகுதியாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி சூளுரைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான LDF கூட்டணி சார்பில் கடந்த முறை பாஜக எம்.எல்.ஏ ராஜகோபாலிடம் தோல்வியை தழுவிய சிவன்குட்டி மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

கேரளாவில் பாஜக அசைக்கமுடியாத சக்தியாக மாறும், நேமம் அதற்கு அச்சாரமாக இருக்கும் என்று கும்மனம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

நேமம் தொகுதியில் மீண்டும் பாஜக வெல்லுமா? அல்லது வேறு ஒரு கட்சி பாஜகவின் வெற்றியை தட்டிப்பறிக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான விடை மே 2ம் தேதி கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: