குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தலில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சியும், அந்த வேட்பாளரும் ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் தேர்தலின் போது குறிப்பிட்ட காலத்தில் 3 முறை விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, வேட்புமனு தாக்கல் முடிந்த பின் 4 நாட்களுக்குள் ஒரு முறையும், 5 -இல் இருந்து 8 நாட்களுக்குள் இரண்டாவது முறையும், வாக்குப்பதிவுக்கு 2 நாளுக்கு முன்பாகவும் வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை போட்டியே இல்லாமல் வேட்பாளர் வென்றாலும், அவரது குற்றப்பின்னணியை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.