ஹோம் /நியூஸ் /அரசியல் /

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் முதல்வர் பழனிசாமியை பாராட்டி இருப்பார்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் முதல்வர் பழனிசாமியை பாராட்டி இருப்பார்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் (கோப்புப்படம்)

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் (கோப்புப்படம்)

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான செயல்பாடுகளை கண்டு பாராட்டி இருப்பார் என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

  தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாநாடு நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மூன்று நிமிடங்கள் இந்த ஆட்சி நீடிக்குமா என்று கேட்டவர்களுக்கு தனது சிறப்பான செயல்பாடுகளால் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து முதலமைச்சர் பழனிசாமி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான செயல்பாடுகளை கண்டு பாராட்டி இருப்பார் எனவும் அவர் கூறினார்.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: AIADMK