அதிமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று சாலையை மறித்து போலீசாரிடம் முறையிட்ட பொதுமக்கள்

அதிமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று சாலையை மறித்து போலீசாரிடம் முறையிட்ட பொதுமக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

ராசிபுரம் தொகுதியில் அதிமுகவினர் முறையாக பணப் பட்டுவாடா செய்யவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பணப்பட்டுவாடாவில் யாராவது ஈடுபடுகின்றனரா என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  பணப்பட்டுவாடா தொடர்பாக வரும் புகார்களின் மீது பறக்கும் படையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முறையாக பணப்பட்டுவாடா நடைபெறவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் ஒரு சிலருக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தங்களுக்கு பணம் தரவில்லை என ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சாலைகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி முறையாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

      

  இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தியும் யாரும் கலைந்து போகாததால் 3 பேரை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.  இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் வெளிப்படையாக பணம் கேட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Vijay R
  First published: