கடற்கரையில் குப்பையை சுத்தம் செய்த மோடி... விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு

கடற்கரையில் குப்பையை சுத்தம் செய்த மோடி... விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு
  • Share this:
மாமல்லபுரத்தில் நடைபயிற்சியின் போது கடற்கரையில் இருந்த குப்பைகளை வெறும்கைகளால் சுத்தம் செய்த பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. முதல் நாள் சந்திப்பின் போது மாமல்லபுரத்தின் சிறப்புகளை சீன அதிபருக்கு பிரதமர் எடுத்துரைத்தார். கடற்கோயிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளுக்கு பின், இரவு விருந்து முடிந்து சீன அதிபர் மாமல்லபுரத்திலிருந்து புறப்பட்டார்.

இந்நிலையில் மாமல்லபுர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி காலையில் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது கடற்கரை ஓரங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை சேகரித்துள்ளார். அதன் வீடியோவை மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


அந்தப் பதிவில் ” 30 நிமிடங்களுக்கு மகாபலிபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி துப்புரவுப் பணியை மேற்கொண்டேன். அதில் சேகரித்த குப்பைகளை விடுதியின் ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்தேன். மக்கள் புழங்கும் பொதுவெளிகள் தூய்மாக இருக்க உறுதி செய்வோம். அதேபோல் உடல் உறுதியும், ஆரோக்கியமும் காக்க முனைப்புடன் செயல்படுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.மோடியின் இந்த பதிவை பார்த்த பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், “இன்று காலையில் நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது“ என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில், “சென்னை கோவளம் கடற்கரையில் அலையில் அடித்து வரப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அப்புறப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. தூய்மை முக்கியம், பிளாஸ்டிக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் உணர வேண்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.Also Watch

First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading