Rajinikath Press meet Live: கட்சி வேற.. ஆட்சி வேற என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்கனும்... நடிகர் ரஜினிகாந்த்

முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன். மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரனமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன். முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல.

Rajinikath Press meet Live: கட்சி வேற.. ஆட்சி வேற என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்கனும்... நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
 • Share this:
அரசியல் கட்சி தொடர்பான செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. ஆனால் ரஜினியின் பேச்சு சினிமா பட டயலாக் போலவே கடந்து விடுமா என்ற அச்சம் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்தன. அவற்றுக்கு இன்று நடைபெற இருக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், ”96-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. • 96-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. 1995 முதல் நான் அரசியலுக்கு வர உள்ளதாக ஒருபோதும் கூறியதில்லை.

 • சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது. புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை. அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள்.
 • கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. முதலமைச்சர் பதவியை நான் எப்போதுமே நினைத்துப் பார்த்தது இல்லை. அரசியல் மாற்றத்துக்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன். 

 • கட்சி விழாக்கள், நிகழ்வுகளில் ஆட்சியில் இருப்பவர்கள் வரத்தேவையில்லை.கட்சித் தலைமை என்பது எதிர்கட்சி போன்றது.

 • அன்பு, பாசம், தன்மானம் கொண்ட ஒருவரை நாம் முதலமைச்சராக்குவோம்.

 • கட்சித் தலைவனாக இருந்து நல்ல மனிதரை முதலமைச்சராக உட்காரவைப்பேன். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு நான் பாலமாக இருப்பேன்.

 • முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன். மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரனமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன்.
  முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல.

 • நல்ல தலைவர்களை உருவாக்குவபர்தான் நல்ல தலைவன்.

 • அசுரபலத்துடன் கூடிய திமுகவையும், அதிமுகவையும் நாம் எதிர்கொள்ளப்போகிறோம். ஆட்சியையும், குபேரன் கஜானாவையும் அதிமுக கையில் வைத்திருக்கிறது.

 • ஒரு நல்ல அரசியல் தலைவனை உருவாக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

 • தமிழ் மண் புரட்சிகளுக்கு பெயர் பெற்ற மண். மக்களில் சிலரிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. அறிவில்லாமல் இருக்கின்றனர். மக்கள் அலைக்கு முன்பாக அசுரபலம் ஒன்றுமில்லை.
  அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்... இப்போ இல்லன்னா இனி எப்பவும் இல்லை - நடிகர் ரஜினிகாந்த்
கடந்த 5-ஆம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா என ரஜினிகாந்த் கேட்டதாகவும், அதற்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மறுப்பு தெரிவித்து அவரே முதல்வர் வேட்பாளராக வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மாவட்டச் செயலாளர்களை அவர் இன்று மீண்டும் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தான் முதலமைச்சர் ஆகப் போவதில்லை என ரஜினி அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியானது. அடுத்த மாதம் 14-ஆம் தேதி கட்சி தொடங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்ப, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு, இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நட்பு வட்டாரங்களையும் ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading