நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்!

நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

 • Share this:
  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இரவு 8 மணி நிலவரப்படி திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 116 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்  கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து , வெற்றி  அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட  ஆயுளுடனும்,  ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து  தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில்  ஆட்சி செய்து , தமிழகத்தை  வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற  வேண்டும் என மனமார  வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

     நடப்பு சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். பின்னர் கொரோனா  பரவல் அதிகரித்து காணப்படுவதால், தனது உடல்நிலை மற்றும்  தன்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என கூறி  அரசியலுக்கு வரவில்லை என அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: