ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்

ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்த அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்

ரஜினிகாந்த்

கட்சிப் பெயரை ரஜினி மாற்றிக்கொள்ள வேண்டும், மீறிப் பதிவு செய்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம்.

 • Share this:
  ரஜினிகாந்த் புதிதாகத் தொடங்க இருக்கும் கட்சிக்கு, மக்கள் சேவை கட்சி என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் கூறி இருக்கிறார்.

  அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அகில இந்திய மக்கள் சேவை இயக்க இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் நடிகர் ரஜினிகாந்த் புதிதாகத் தொடங்கவுள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி எனப் பெயரிடப்படுவதாகத் தகவல்கள் வெளிவருவதாகவும். ஏற்கெனவே, கடந்த 25 ஆண்டுகளாக, அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் மக்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறோம் என்றும் கூறிய அவர், இந்நிலையில், ரஜினி தனது கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்தால் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

  இதனால், கட்சிப் பெயரை ரஜினி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், மீறிப் பதிவு செய்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். மேலும், இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  டிசம்பர் 31-ஆம் தேதி ரஜினி தான் தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: