அதிமுக, திமுக உடன் கூட்டணி இல்லையென்றால் கமல் வேறுநாட்டுக்குதான் செல்ல வேண்டும் - அமைச்சர்

ராஜேந்திர பாலாஜி

 • Last Updated :
 • Share this:
  அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றால் கமலஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசன் கூட்டணி பற்றி பேசியதற்கு பதில் அளித்துள்ளார்.

  ரஜினி-கமல் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து ரஜினி ஏதும் கூறவில்லை என்றும், கமல்ஹாசன்தான் பேசுகிறார் என்றும் விமர்சித்தார்.

  மேலும், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் கூறியதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்றார்.
  Published by:Yuvaraj V
  First published: