• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது - பாஜக புகார் மனு

தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது - பாஜக புகார் மனு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து அவர்களை மூளை சலவை செய்து அரசியல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என குற்றம்சாட்டி உள்ளார்.

  • Share this:
    தேர்தல் நடத்தை விதிகளை ராகுல் காந்தி மீறியதாகவும், தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி மீது தேர்தல் விதிகளை மீறியதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சந்தித்து பாஜக புகார் மனு அளித்தனர். இந்தப் புகார் மனுவை, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளஎ கே.டி ராகவன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்திய பின்பு கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி மாணவர்களை சந்தித்து உரையாற்றினார்

    அந்தக் கூட்டத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததாகவும், அந்த கருத்துக்கள் தேர்தல் ரீதியாக மாணவர்களை தூண்டும் விதத்தில் அமைந்ததாக குற்றம் சாட்டினார். இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்திய பின்பு இவ்வாறான கூட்டத்தை நடத்தி மாணவர்கள் மத்தியில் இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்திய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புகார் மனுவை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்த புகார் மனுவின் அடிப்படையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: