நிரூபிக்கத் தயாரா ? அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரைக்கு திமுக வேட்பாளர் அப்பாவு சவால்

நிரூபிக்கத் தயாரா ?  அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரைக்கு திமுக வேட்பாளர் அப்பாவு சவால்
  • Share this:
ராதாபுரம் தொகுதி விவகாரத்தில் பெரும்பான்மை தபால் வாக்குகளுக்கு ஒரே நபர் சான்று அளித்தார் என்பதை நிரூபிக்க அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை தயாரா என திமுக வேட்பாளர் அப்பாவு சவால் விடுத்துள்ளார்.

தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் எழுந்துள்ள சட்ட வினாவிற்கு தீர்வு காண்பதற்காகவே உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை விளக்கம் அளித்துள்ளார்.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு பற்றி ஸ்டாலின் பேசி வருவது குறித்தும், உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார்.


இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிவரும் ஸ்டாலின், துன்பத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மேலும், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கவே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், அது பற்றி பேச தங்களுக்கு வாய்ப்பூட்டு போடவில்லை எனவும் திமுக வேட்பாளர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான தபால் வாக்குகளுக்கு ஒரே நபர் சான்று அளித்ததை இன்பதுரை நிரூபிக்கத் தயாரா எனவும் அப்பாவு சவால் விடுத்துள்ளார்.ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட வரும் 23-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

First published: October 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading