எம்எல்ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்: புகழேந்தி போர்க்கொடி

எம்எல்ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்: புகழேந்தி போர்க்கொடி
புகழேந்தி
  • Share this:
அதிமுகவுக்கும், ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டால், முதல் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் என அமமுக அதிருப்தியாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய புகழேந்தி, 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக, டிடிவி தினகரனே காரணம் என குற்றஞ்சாட்டினார். தான் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என தினகரன் நினைப்பதாக விமர்சித்த அவர், இனி தினகரனோடு சேர்ந்து பயணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

4 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா 3 ஆண்டுகளிலேயே வெளியே வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட புகழேந்தி, அதுவரை அதிமுகவுக்கும், கட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டால், முதல் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் என உறுதியளித்தார்.


இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரன் இழிவுபடுத்தி பேசுவதை மக்கள் விரும்பவில்லை என்றும், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் புகழேந்தி வலியுறுத்தினார்.
First published: October 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading