அரசியலில் இருந்து விலகுகிறேன் - அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி

அரசியலில் இருந்து விலகுகிறேன் - அமித்ஷாவிற்கு சவால் விட்ட நாராயணசாமி

நாராயணசாமி

புதுச்சேரிக்கு 15 கோடி நிதி கொடுத்ததாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகுகின்றேன்.

 • Share this:
  தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெதரிவித்துள்ளார்.

  புதுச்சேரியில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் நூதன போராட்டம் நடத்தினர். அண்ணா சிலை எதிரே நடந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், அடுப்பு மூட்டி வாழைக்காய் பஜ்ஜி போட்டு சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

  இந்த போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, விமானத்திலிருந்து கோடி, கோடியாக கொண்டு வந்து கொடுத்து அமைச்சரவையில் இருந்த எட்டப்பன்களை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தார்கள். புதுச்சேரிக்கு 15 கோடி நிதி கொடுத்ததாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகுகின்றேன், இல்லையென்றால் அமித்ஷாஅமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற எனது சவாலை ஏற்க அமித்ஷா தயாரா என நாராயணசாமி கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்றவர்கள் நடுத்தெருவிற்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார்.

  மேலும் தாமரை மலரும் என குதித்த தமிழிசை தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர். தற்போது புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகத்தில் அமர்வதற்கு தமிழிசை ஆசைப்படுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டினார். கொரோனா பரவல் இருக்கும் நிலையில் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என தமிழிசை கூறியது மாணவர்களை பாதிக்கும். இதை உடனடியாக தமிழிசை திரும்பப்பெற வேண்டும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: