யாரோ எழுதிக் கொடுத்ததை நட்டா பேசுகிறார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காரசாரம்

யாரோ எழுதிக் கொடுத்ததை நட்டா பேசுகிறார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காரசாரம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி வந்திருந்த நட்டா, நாராயணசாமி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மில்களை மூடியது, ரேஷன் கடைகளை மூடியது தொடர்பாக நாராயணசாமியை அவர் சாடினார்.

  • Share this:
    ஜார்கண்ட் அரசின் ரூ.5000 கோடி கடன் தள்ளுபடிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், யாரோ எழுதிக் கொடுத்ததை விவரம் புரியாமல் பேசுகிறார் ஜே.பி.நட்டா என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார்.

    நான் மத்திய அமைச்சராக இருந்த போது புதுச்சேரிக்கு துரோகம் இழைத்து விட்டதாக நட்டா கூறுகிறார். நான் பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நிதியமைச்சர் கிடையாது என்பது அவருக்குத் தெரியாதா?

    ஜார்கண்ட் அரசின் ரூ.5000 கோடி கடன் தள்ளுபடிக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. யாரோ எழுதிக் கொடுத்ததை நட்டா பேசுகிறார். அவர் அடுத்த முறை புதுச்சேரி வரும்போதாவது உண்மைகளை தெரிந்து கொண்டு வந்து பேசினால் நல்லது.

    நான் நட்டாவுக்கு கடிதம் எழுதி கேட்பேன், என் மீதான அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பேன்.

    ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசிக்கு பதிலாக, பணம் வழங்க கவர்னர் உத்தரவிட்டார். நாங்கள், ரேஷன் கடைகளை மூடவில்லை. பட்ஜெட்டில்ஒதுக்கிய நிதியை செலவு செய்ய விடாமல், காங்., அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, கவர்னர் மூலம் தொல்லை தருகின்றனர்.

    ஏ.எப்.டி., மில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து,'சி யூனிட்' மட்டும் இயக்க கோப்பு அனுப்பினோம். எங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல், மில்களை மூட கவர்னர் உத்தரவிட்டார். அதற்கான ஆதாரம் உள்ளது.

    டெக்ஸ்டைல் மில்களை மூடியதற்குக் காரணம் ஆளுநர் கிரண் பேடிதான் என்னை எப்படி நட்டா குற்றம்சாட்ட முடியும்?என்று நாராயணசாமி சாடினார். மேலும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் கொடுப்பதைத் தடுத்து கொடுக்கும் பொருட்களுக்கான மதிப்பை ரொக்கமாக மக்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் என்றார்.

    அதே போல் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என்று கூறியதும் கிரண் பேடிதான் என்று நாராயணசாமி சாடினார்.

    முன்னதாக புதுச்சேரி வந்திருந்த நட்டா, நாராயணசாமி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மில்களை மூடியது, ரேஷன் கடைகளை மூடியது தொடர்பாக நாராயணசாமியை அவர் சாடினார்.

    புதுச்சேரியில் பாஜக கிளீன் ஸ்வீப் வெற்றி பெற்று மக்களுக்கு ஊழலற்ற வளர்ச்சியை நோக்கிய ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று சூளுரைத்தார்.
    Published by:Muthukumar
    First published: