தொகுதி பொதுமக்கள் என்னை மன்னித்துவிடுங்கள் - மனம் வருந்திய அதிமுக எம்.எல்.ஏ

நாமக்கல் சட்டமன்ற எம்.எல்.ஏ பாஸ்கர்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னுடைய பேச்சு புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று நாமக்கல் சட்டமன்ற எம்.எல்.ஏ பாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 • Share this:
  நாமக்கல் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ பாஸ்கர் போட்டியிடுகிறார். நாமக்கல் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஸ்கர் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய போது, “மனசாட்சினு ஒன்னு இருந்தா இலைக்கு ஓட்டு போடுங்க, நீங்க இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா, கண்டிப்பா நல்ல சாவு சாக மாட்டீங்க..” என்றார். அவரின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து எம்.எல்.ஏ பாஸ்கர் கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், மதிப்பிற்குரிய எனது உயிரினும் மேலான நாமக்கல் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது குடும்பம் இரண்டு தலைமுறையாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். திமுக மற்றும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள் அம்மாவின் 10 ஆண்டு கால தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகினற்னர்.  கடந்த 20.03.2021 அன்று மோகனூர் டவுன் காந்தமலை கோவிலில் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சிகள் எனக்கு தொடர்ந்து அளித்த வந்த மனஅழுத்தத்தின் காரணமாக திமுக-வினர் இரட்டை இலைக்கு வாக்களிக்கவிட்டால் நல்ல இருக்க மாட்டார்கள் என்று சொன்னேன். அன்றைய தினம் நான் சொன்ன வார்த்தைகள் என்னால் பயனடைந்த திமுக-வினரை மனதில் வைத்து தான் பேசினேன். இது குறித்து உண்மையில் மனம் வருந்துகிறேன். ஒரு வேலை என்னுடைய பேச்சு யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால் நான் நாமக்கல் சட்டமன்ற பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: