• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்- மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்- மு.க.ஸ்டாலின்

மக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.

  • Last Updated :
  • Share this:
    வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

    இது குறித்து கூட்டத்தில் அவர் பேசுகையில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு 23 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகிறோம்.

    கொரோனா காலத்தில் மக்களுக்கு விரோதமான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், மக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருவதாகவும் கூறினார்.

    விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் என்றும், இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது தான் அது என்றார் ஸ்டாலின். தொடர்ந்து பேசிய அவர், தற்போது இந்தியாவே கொதித்து போய் இருப்பதாகவும், தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும், விவசாயிகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த சட்டங்கள் இருபதாகவும், எதற்காக இவ்வளவு அவசரம், யாரை பாதுகாக்க இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரையில் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் 21 பேர் அதிர்ச்சியால் இறந்திருப்பதாகம் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து, மறைந்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    உண்ணா நிலை போராட்டத்தில் பங்கேற்றுள்ள முக்கிய தலைவர்கள்:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: