அரசியலின் நடிகன் சீமானே... தேனியில் விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்!

அரசியலின் நடிகன் சீமானே... தேனியில் விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்!

கண்டன போஸ்டர்

சீமானை கண்டித்து விஜய் ரசிகர்கள் தேனியில் கண்டன போஸ்டர்!

 • Share this:
  ரஜினி, கமலை அடிக்கின்ற அடியில் விஜய் உட்பட எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பேட்டியளித்திருந்தார்.

  சீமானின் இந்த பேச்சக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தேனி மாவட்ட இளைஞர் அணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தேனி என்ஆர்டி நகர் பகுதியில் சீமானை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ‘அரசியலின் நடிகன் சீமானே எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

  நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் “ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது.

  ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆர்-யை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவிற்குத்தான் போய்ச் சேரும். எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் நாங்கள் அவரை மதிக்கிறோம் மற்றபடி எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி கொடுத்தார். கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம்.ஜி.ஆர்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: