டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று தாரபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

  தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் பிரபலங்கள் பேச்சு சில நேரங்களில் சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக ஆளும் அதிமுக அரசு மீதும் முதல்வர் பழனிசாமி மீதும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

  இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி விழுப்புரத்தில் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறாக பேசியதாக, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். புகரின் அடிப்படையில் ஆதாரமின்றி அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதேபோல், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது வடக்கிபாளையம் காவல்நிலையத்தில் 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக திமுக பிரமுகர் பார்த்தசாரதி அளித்த புகார் அளித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: