வன்னியர்களுக்கு 20 சதவீத முழுமையான இட ஒதுக்கீடு என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி உள் ஒதுக்கீடு வழங்க பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வன்னியர் சமுகத்திற்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிர்வாக குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும், இதனை சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் வெள்ளிக்கிழமை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்