• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • பாஜகவுக்கு காமாலைக் கண்: பெரியார் பற்றிய பதிவுக்கு ராமதாஸ் கண்டனம்

பாஜகவுக்கு காமாலைக் கண்: பெரியார் பற்றிய பதிவுக்கு ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

  • News18
  • Last Updated :
  • Share this:
பெரியார் பற்றிய பாஜகவின் ட்விட்டர் பதிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 46-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரின் சிலைக்கு அரசியல் கட்சிகளும் பொது மக்களும் மரியாதை செலுத்து வருகின்றனர்.

பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் பேச்சுகளும் எழுத்துகளும் அதிக அளவில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது.

கூட்டணி கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் அந்த பதிவு குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் அந்த ட்வீட் குறித்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.



அதில் “ தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: