ஆ.ராசா போல் எங்கள் கட்சியில் யாராவது பெண்களை இழிவாக பேசியிருந்தால்? அன்புமணி ஆதங்கம்

அன்புமணி ராமதாஸ்

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் இரா.அருள் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அன்புமணி ராமதாஸ் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது, ஒரு விவசாயி என்பதே எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய தகுதி. சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, சுதந்திர தினம், குடியரசு தினம் எதுவும் ஸ்டாலினுக்கு தெரியவில்லை . கணக்கும் தெரியவில்லை ஸ்டாலினுக்கு.இவர் முதலமைச்சர் ஆக வேண்டுமா?. மீடியா மட்டும் இல்லாவிட்டால் ஸ்டாலின் ஜீரோ. ஸ்டாலின் தான் வராரு, அல்வா தர போறாரு என்று விமர்சனம் செய்தார்.

  இந்த சட்டமன்ற தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். சமூக நீதியின் அடிப்படையிலேயே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எனது வாழ்நாளில் 10 ஆண்டுகாலம் சேலம் மாவட்டத்தில் தான் வாழ்ந்தேன்.

  இது மாம்பழ சீசன். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை அடைய உள்ளோம். பாமகவின் கோரிக்கையான மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முதற்கட்டமாக துவக்கி உள்ள முதலமைச்சர் இந்த திட்டத்தை சேலம் மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்த உள்ளார். வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்றது போல், பின்தங்கிய அனைத்து சமுதாயத்திற்கும் தனித் தனியாக இட ஒதுக்கீடு பெறவேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்

  திமுக தலைவர் ஒரு அரசியல் வியாபாரி. விவசாயிக்கும் ஒரு அரசியல் வியாபாரிக்கும் நடைபெறுகின்ற தேர்தல். முதல்வரின் அரசியல் குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து கூறலாம். ஆனால் அவரின் தாய் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை ஒரு போதும் மன்னிக்க மாட்டோம். திமுக என்றால் தாய்மைக்கு எதிரான ஒரு கட்சி. பெண்மையையும், தாய்மையையும் மதிக்கத் தெரியாதவர்கள் என்றார்.

  மேலும் ஆ.ராசா போன்று யாராவது எங்கள் கட்சியில் பேசியிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியருப்போம். திமுக-வில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் பெண்களை குறித்து தவறாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

  பெண்ணுரிமை பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசும் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் முதல்வரின் தாயை பற்றி பேசிய ஆ.ராசா பற்றி வாய் திறக்காதது ஏன்? தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களும் திமுகவை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டார்கள்.

  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கட்சியினர் மற்றும் நிர்வாகிகளை யாரையும் நம்புவதில்லை. பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட பிரசாத் கிஷோர் மட்டும் நம்புகிறார். ஆனால் அதிமுக கூட்டணி தமிழக மக்களை நம்பி உள்ளோம்.

  திமுக தலைவர் சட்டசபையில் இதுவரை எதுவாவது பேசியுள்ளாரா? தமிழக முதல்வராக வேண்டும் என்பது கனவாகவே போகும். திமுக கட்சி என்பது ஒரு கம்பெனி, ஒரு குடும்பம். திமுகவில் மன்னராட்சியாக உள்ளது. அதில் நிதிகள் மட்டுமே வர முடியும், மக்கள் வர முடியாது. திமுக தோல்வி பயத்தில் தனிநபர் விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே திமுகவினர் தோற்று விட்டனர் என்றார்.
  Published by:Vijay R
  First published: