தி.மு.கவின் மன்னராட்சியா? அ.தி.மு.கவின் மக்களாட்சியா? - திருவல்லிக்கேணியில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

அன்புமணி ராமதாஸ்

பிரசாந்த் கிஷோர் தான் திமுகவில் எல்லா பதவிகளையும் பொறுப்புகளையும் நியமிக்கிறார். பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்பவர்தான் தி.மு.க-வில் வட்டம், பகுதி, மாவட்ட செயலாளர்களாக இருக்கின்றனர்.

  • Share this:
    திருவல்லிக்கேணியில் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் கஸ்ஸாலியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போதுபேசிய அன்புமணி ராமதாஸ், “நம்ம அணி மக்களாட்சி, திமுகவில் மன்னராட்சி. இங்க ஒரு விவசாயி முதல்வராக வரலாம். இன்னொரு விவசாயி துணை முதல்வராக வரலாம். இது மக்களாட்சி. அங்கு மன்னராட்சி அப்பா, மகன், அவருடைய மகன் இதுதான் மன்னராட்சி.

    திமுக தலைமையில் மன்னராட்சி என்றால் மாவட்டத்தில் குறுநில மன்னர்கள் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் அவர்களின் பிள்ளைகள் அவர்களின் உறவினர்கள்தான் அங்கு பதவிக்கு வரமுடியும். மு.க.ஸ்டாலின் மக்களை நம்பவில்லை. வாக்காளர்களை, சிறுபான்மையினரை, மாணவர்களை என யாரையும் அவர் நம்பவில்லை. யாரை நம்புகிறார் தெரியுமா பீகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் என்ற நபரை நம்புகிறார். பீகாரில் இருந்து அவரை இங்கு அழைத்து வந்து அவரிடம் 200 கோடி ரூபாயை கொடுத்து என்னை எப்படியாவது முதல்வராக்குங்கள் என்று கூறியுள்ளார்.

    நாங்கள் உழைக்கின்ற பாட்டாளி, தொழிலாளர் வர்க்கமான உங்களை நம்புகிறோம். ஸ்டாலினோ பீகாரில் இருந்து வந்திருப்பவரை நம்புகிறார். திமுக கட்சிக்காரர்களை கூட அவர் நம்பவில்லை. பிரசாந்த் கிஷோர் தான் திமுகவில் எல்லா பதவிகளையும் பொறுப்புகளையும் நியமிக்கிறார். பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்பவர்தான் தி.மு.கவில் வட்டம், பகுதி, மாவட்ட செயலாளர்களாக இருக்கின்றனர். அவர் சொல்பவர்தான் வேட்பாளர். திமுகவினர் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.

    70 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு விவசாயி முதல்வராகியுள்ளார். நாம் எல்லாம் விவசாயி குடும்பத்தினர்தான். நம்மில் ஒருவர், விவசாயி குடும்பத்தில் இருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வராக வருவது நமக்கு எல்லாம் பெருமை. அது தொடரவேண்டும். எடப்பாடி பழனிசாமியை யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஸ்டாலினை அப்படி அணுக முடியுமா? சிந்தித்துப்பாருங்கள். உங்கள் ஓட்டு மன்னாராட்சிக்கா அல்லது மக்களாட்சிக்கா என நீங்களே முடிவு எடுங்கள்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: