பாரத் மாதா கி ஜே என்றால் அக்கா கோபப்படுகிறார்: மம்தா மீது பிரதமர் மோடி சாடல்

பிரதமர் மோடி

தாய், தாய்நிலம், மக்கள் என்று பேசுபவர்களுக்கு பாரத மாதாவிற்காக குரல் எழுப்ப தைரியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் அரசியலை கிரிமினல் மயமாக்கிவிட்டனர்

 • Share this:
  பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் ஹால்தியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். அசாம் மாநில நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தா வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹால்தியாவிற்கு வந்தார்.

  எண்ணெய், எரிவாயு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் நான்கு திட்டங்களை அவர் திறந்து வைத்தார். பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை.

  ஹால்தியா நிகழ்ச்சியில் உத்தரகண்ட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிரதமர் வருத்தத்தை தெரிவித்தார். பாரத் மாதா கி ஜே என்று உரையை தொடங்கிய மோடி, “

  யாராவது 'பாரத் மாதா கி ஜே' என்று கோஷமிட்டால் மம்தா அக்கா கோபப்படுவார். ஆனால் துரோகிகள் நாட்டிற்கு எதிராக பேசினால் ஒருபோதும் அமைதியை இழக்கமாட்டார். யோகா, இந்திய தேநீர், பிற பொருட்களுக்கு எதிராக சதி நடக்கிறது. ஆனால் மம்தா அது தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. நாட்டிற்கு எதிராக சதி செய்யும் அனைவருக்கும் இந்தியா பதிலடி தரும்.

  தாய், தாய்நிலம், மக்கள் என்று பேசுபவர்களுக்கு பாரத மாதாவிற்காக குரல் எழுப்ப தைரியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் அரசியலை கிரிமினல் மயமாக்கிவிட்டனர். ஊழலை நிறுவனமயமாக்கியுள்ளனர். காவல் துறையை அரசியல் மயமாக்கிவிட்டனர். வங்கத்து மக்கள் முதல்வரிடம் பாசத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கொடுமைதான் கிடைத்தது. தவறான நிர்வாகத்திலிருந்து பா.ஜ.க.வால் மட்டுமே மாநிலத்தை விடுவிக்க முடியும்.

  திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை திரைக்கு பின்னால் ஒன்றாக உள்ளன. மேட்ச் பிக்சிங் செய்கின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள். ஒன்றாக இணைந்து திட்டம் போடுகிறார்கள். வங்காளத்தில், இடதுசாரிகள், திரிணாமுல் போடும் சண்டை ஒரு மோசடி. கேரளாவிலும், இடதுசாரிகளுக்கும், காங்கிரசுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது.

  மேற்கு வங்க மக்களுக்கு கால்பந்து பிடிக்கும் எனவே அந்த மொழியிலேயே பேசுகிறேன், ஏகப்பட்ட மோசடிகள், கள்ள ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

  மோசடி அரசாட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்குவது, பணத்தை திருடுவது, பெங்கால் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். விரைவிலேயே திரிணாமூலுக்கு ராமர் அட்டையைக் காட்டும்.” இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.
  Published by:Muthukumar
  First published: