தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசார கூட்டத்தில் பிரதமருடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். மேலும், இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு கோவை விமானநிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்
அதன்பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு 12.50 மணிக்கு வருகிறார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். 1.40 மணிக்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவை விமானநிலையத்திற்கு செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி தாராபுரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். .