பிரதமர் மோடி தான் நிஜ ஜல்லிக்கட்டு நாயகன் - ஓ.பி.எஸ். புகழாரம்

பிரதமர் மோடி தான் நிஜ ஜல்லிக்கட்டு நாயகன் - ஓ.பி.எஸ். புகழாரம்

ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும் உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்.

 • Share this:
  தேசிய ஜனநாயக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடந்து வருகிறது. இந்தக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.

  இதனையடுத்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம். ‘ எல்லோரும் என்னை ஜல்லிக்கட்டு என்று அழைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி காளை மாடுகளை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால் தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. நான் முதல்வராக இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர் திரண்டனர்.

  நான் உடனடியாக டெல்லி சென்று பிரதமர் அவர்களை சந்தித்தேன். அவரிடம் விவரத்தை எடுத்துக் கூறினேன். அவர் 24 மணி நேரத்தில் 4 துறைகளின் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத் தந்தார். ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும் உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்” என்றார்.
  Published by:Ramprasath H
  First published: