தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் - யாருக்கும் அதிகாரம் இல்லை என விமர்சித்த கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் - யாருக்கும் அதிகாரம் இல்லை என விமர்சித்த கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். 38 பேர் கொண்ட இந்த குழுவில், எம்.எல்.ஏ.க்கள் விஜயதாரணி, பிரின்ஸ், கணேஷ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவில் அமெரிக்கை நாராயணன், மணிசங்கர் ஐயர், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  குழுவின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 104 பேருக்கு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் கே.எஸ்.அழகிரி இடம் பெற்றுள்ளார். தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், 16 பேர் அடங்கிய ஊடக ஒருங்கிணைப்பு குழுவையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிடப்பட்டுள்ளது.

  These jumbo committees serve no purpose. None will have any authority which means no accountability. @INCIndia @INCTamilNadu @kcvenugopalmp @dineshgrao @RahulGandhi @priyankagandhi https://t.co/C8p4nIwNSX  இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இவ்வளவு பெரிய குழுவால் எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகாரம் இல்லாததால், யாருக்கும் எந்தப் பொறுப்பும் இருக்காது என கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: