சட்டமன்றத் தேர்தலில் உதய சூரியனே தி.மு.கவின் வெற்றிக்கான முழக்கமாக இருக்கும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதியில் இன்று பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தேவாலயம் சென்று பொதுமக்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களிடையே தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வெற்றி வாய்ப்பு பிராகாசமாக இருப்பதாக கூறினார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற விரும்புகின்றேன். சட்டமன்ற தேர்தலில் உதய சூரியனே தி.மு.கவின் வெற்றிக்கான முழக்கமாக இருக்கும் என்றார்.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரம் துவங்க இருப்பதாகவும் மதுரை திருபரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பா.ஜ.க-வில் இணைவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.