அமெரிக்காவில் பற்றவைக்கப்பட்ட தீ: இனவெறிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் முழங்கிய தமிழர் பறையிசை

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமேனி மற்றும் அரவிந்த் குருசாமி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் இசையான பறையடித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்.

அமெரிக்காவில் பற்றவைக்கப்பட்ட தீ: இனவெறிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் முழங்கிய தமிழர் பறையிசை
ஆஸ்திரேலியாவில் முழங்கிய பறையிசை
  • Share this:
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமேனி மற்றும் அரவிந்த் குருசாமி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் இசையான பறையடித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்.

கடந்த வாரம் திங்கட்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை மோசடி வழக்கில் சந்தேகித்து போலீஸார் கைது செய்தனர். கைதின்போது  அவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.இந்த சம்பவத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு நீதி கேட்டும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் பல இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டிலும் கடந்த சில நாட்களாக நிறவெறிக்கு எதிராக போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று காவல்துறையின் எதிர்ப்பையும் மீறி சிட்னியின் டவுன்ஹால் என்கிற இடத்தில் நடந்த போராட்டத்தின்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமேனி மற்றும் அரவிந்த் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் இசையான பறையடித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் சிலர் பறையிசைக்கு ஏற்ப நடனமாடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading