நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். கூடுதல் கட்சிகளும் பேசி வருகின்றன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், அரசுமுறை பயணமாகவே அமெரிக்கா சென்றேன். தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு பலரிடம் கூறியுள்ளோம். பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
மேயர் தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம். யார் இணைந்தாலும், பிரிந்தாலும் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். கூடுதல் கட்சிகளும் பேசி வருகின்றன. கூட்டணி கட்சிகளுடன் பேசி இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
மேலும் ரவீந்திரநாத் குமார் குறித்த அன்வர்ராஜாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதைக் கிளற வேண்டாம் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.