OPPORTUNITY TO CANCEL ELECTIONS IN 7 CONSTITUENCIES IN TAMIL NADU VJR
கொளத்தூர் உட்பட தமிழகத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு - தகவல்
இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் அதிகம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் திருச்சி மேற்கு, கரூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பணப்பட்டுவாடாவில் யாராவது ஈடுபடுகின்றனரா என்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் உள்ளிட்ட 5 முதல் 7 தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 5, 2021
தேர்தல் செலவின பொறுப்பாளர்கள் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் வழங்கிய பரிந்துரையின் கீழ் 5 முதல் 7 தொகுதிகள் வாக்குப்பதிவை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளில் அளவுக்கு அதிகமான பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் கூறி உள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது தேர்தல் ஆணையம் முக்கிய ஆலேசானையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.