"ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே" - கட்சியினருக்கு ஓ.பி.எஸ் அட்வைஸ்

கட்சியினர் அனைவரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்
  • Share this:
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக, 2021 தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அண்மையில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த சூழலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உரிய காலத்தில் முறையாக அறிவிக்கப்படும் என்றார்.


இந்நிலையில், டிவிட்டரில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் கனவை நனவாக்க, கட்சியினர் அனைவரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என எம்ஜிஆர் பாடலையும் குறிப்பிட்டு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading