வடசென்னையின் தி.மு.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார் கலாநிதி வீராசாமி.
தி.மு.க-வின் மூத்தத் தலைவர்ஆற்காடு வீராசாமியின் மகன் தான் கலாநிதி வீராசாமி. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த கலாநிதி வீராசாமி, தனது எம்.எஸ் படிப்பை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார். ப்ளாஸ்டிக் சர்ஜரியில் M.Ch., லண்டன் ராயல் கல்லூரியில் FRCSE படிப்புகளை நிறைவு செய்துள்ளார். வீ கேர் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ப்ளாஸ்டிக் சர்ஜனாகவும் பணியாற்றியவர். அப்போலோ மருத்துவமனையிலும் ப்ளாஸ்டிக் சர்ஜனாகப் பணியாற்றி உள்ளார்.
தி.மு.க மருத்துவ அணியில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் கலாநிதி வீராசாமிக்கு தற்போது வடசென்னை மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் இடம் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க வாரிசு என்பதால் வழங்கப்பட்ட சீட் என விமர்சனங்கள் எழுந்தபோது, “குடும்ப வாரிசுகள் அல்ல கொள்கை வாரிசுகள்” என முரசொலியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.