தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

மாதிரி படம்

தமிழகத்தில் இதுவரை 4689 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் 3930 பேர் ஆண்கள், 757 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்ததை சேர்ந்தவர்கள்

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.

  தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்ரேி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

  இந்நிலையில் இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் நிறைவடைந்தது. தமிழகத்தில் இதுவரை 4689 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் 3930 பேர் ஆண்கள், 757 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்ததை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக விளவங்கோடு தொகுயில் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் குறித்த முழு விவரம் வெளியாகும்.

  வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை நாளை நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுக்களை மார்ச் 22-ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம் என்பது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: