பாஜக தேசிய நிர்வாகிகள் நியமனம் - பட்டியலில் தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை

பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா உட்பட தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட பொறுப்புகள் தரப்படவில்லை.

பாஜக தேசிய நிர்வாகிகள் நியமனம் - பட்டியலில் தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை
பாஜக
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 10:26 PM IST
  • Share this:
பாஜக கட்சியில் தேசிய அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா உட்பட தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ளார். அதில், பாஜக முன்னாள் முதலமைச்சர்கள் ராமன் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, ரகுபர் தாஸ் உட்பட 12 பேர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பூபேந்தர் யாதவ் உட்பட 8 பேர் தேசிய பொதுசெயலாளர்களாகவும், பங்கஜ் முண்டே உட்பட 13 பேர் தேசிய செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக பொருளாளராக ராஜேஷ் அகர்வால், இளைஞரணி தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த இளம் எம்பி தேஜஸ்வி சூர்யா என 23 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா உட்பட தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட பொறுப்புகள் தரப்படவில்லை. ராம் மாதவ், முரளிதர் ராவ், சரோஜ் பாண்டே ஆகியோர் பொதுசெயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


தற்போது நியமிக்கப்பட்டுள்ள தேசிய நிர்வாகிகளில் 60 விழுக்காடு பேர் புது முகங்கள் ஆகும்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading