• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • வருமான வரித்துறைக்கு பா.ஜ.க, தி.மு.க என்ற கட்சி பாகுபாடு கிடையாது - காரைக்குடியில் சி.டி.ரவி பேச்ச

வருமான வரித்துறைக்கு பா.ஜ.க, தி.மு.க என்ற கட்சி பாகுபாடு கிடையாது - காரைக்குடியில் சி.டி.ரவி பேச்ச

 பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி

வருமான வரித்துறைக்கு அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க என்ற கட்சி பாகுபாடு கிடையாது. கருப்பு பணம் உள்ளவர்கள் வீட்டில் சோதனை செய்யும். பா.ஜ.க-விடம் பணமே இல்லை.

  • Share this:
    சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னரே கூட்டணி அமைச்சரவை குறித்து முடிவு எடுக்க முடியும் என பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ளது. பாஜகவுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்குடி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கலந்துக்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “தமிழகத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூ.6.10 லட்சம் கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ், ரூ.1.03 லட்சம் கோடியில் சாலை வசதிகள், மெட்ரோ ரயில், ராணுவ உபகரணங்கள் தயாரிக்கும் வழித்தட தொழிற்சாலை போன்றவற்றை செயல்படுத்தியவர் மோடி.

    தமிழக மக்களுக்கு தி.மு.க, காங்கிரஸ் தான் எதிரி. அவர்கள் ஆட்சியில் ஜல்லிக்கட்டை தடை செய்தனர். ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு என்பதால் பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சீனா அதிபரை மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்தது பிரபலபடுத்தியவர் மோடி. அவர் தான் தமிழகத்திற்கு உண்மையான நண்பர். தமிழகம் ஒரு தனி குடும்பத்திற்கு சொந்தமானது கிடையாது. தமிழகம் மக்களுக்கு சொந்தமானது.

    காரைக்குடியில் ஹெச்.ராஜா வெற்றி பெறுவார். தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்ததால் நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது. எங்களது கூட்டணி ஆட்சி வந்தால் கட்டப் பஞ்சாயத்து செய்ய மாட்டோம். நிலத்தை அபகரிக்க மாட்டோம்.

    வருமான வரித்துறைக்கு அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க என்ற கட்சி பாகுபாடு கிடையாது. கருப்பு பணம் உள்ளவர்கள் வீட்டில் சோதனை செய்யும். பா.ஜ.கவிடம் பணமே இல்லை. அப்புறம் எப்படி கருப்பு பணம் இருக்கும். அ.தி.மு.க வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருந்தது இல்லை. பொங்கலுக்கு ரூ.2,500 சொன்னார்கள், பயிர்க்கடன் தள்ளுபடி என்றார்கள் செய்தார்கள். அதேபோன்று 6 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வழங்குவார்கள். மதுரையில் பா.ஜ.கவில் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ சரவணனுக்கு சில மணி நேரங்களிலேயே சீட்டு வழங்கியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, அதுதான் அரசியல் என்று பதிலளித்தார்.

    செய்தியாளர்:  முத்துராமலிங்கம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: