ஐமுகூ தலைவராவதற்கு விருப்பமில்லை : கைவிரித்த சரத் பவார்

ஐமுகூ தலைவராவதற்கு விருப்பமில்லை : கைவிரித்த சரத் பவார்

சரத் பவார்.

ஐமுகூ தலைமைப் பொறுப்பை ஏற்க ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்று மறுத்து விட்டார் சரத் பவார்.

  • Share this:
காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொறுப்பேற்பதாக எழுந்த செய்திகளுக்கு சரத் பவார் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஐமுகூ தலைமைப் பொறுப்பை ஏற்க ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை என்று மறுத்து விட்டார் சரத் பவார்.

நியூஸ் 18-க்கு அவர் கூறும்போது. “ஐமுகூ தலைவராக எனக்கு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றிய கேள்வியே இல்லை.” என்றார் சரத் பவார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற அவர் முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து ஐமுகூ தலைவராக சரத் பவாரை நியமிக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவித்தன. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறியதையடுத்து ஐமுகூ தலைவராக சரத் பவார் பொறுப்பேற்பார் என்ற யூகம் வலுப்பெற்றது.

இந்நிலையில் மறுத்துள்ள சரத் பவார், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Published by:Muthukumar
First published: