NO CHANCE TO WORK WITH DMK ELECTION WORK SAYS MK ALAGIRI SUR
திமுகவுடன் சேர்ந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பில்லை- மு.க.அழகிரி
மு.க.அழகிரி
ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சி ஆரம்பிப்பேன் என்றார் மு.க. அழகிரி.
Last Updated :
Share this:
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுகவுடன் சேர்ந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கோபாலபுரத்தில், தன்னுடைய தாயார் தயாளு அம்மாவின் உடல்நலம் குறித்து மு.க.அழகிரியும் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் நேரில் சந்தித்து விசாரித்தனர்.
அதனத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திமுகவுடன் சேர்ந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பில்லை என்றும் வரும் 3 ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்திய பின்னர், ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி செயல்படுவோம் என்றும் கூறினார்.
மேலும், தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும், ஒட்டு போடுவதும் பங்களிப்புதான், ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் கூறினார்.
ரஜினியை நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ரஜினி சென்னையில் இல்லை என்றும் அவர் பிறந்தநாள் அன்றே அவரை சந்திக்கவில்லை என்றும் கூறிய அழகிரி ரஜினி சென்னை வந்தால் சந்திப்பேன் என்றும் பதிலளித்தார்.