• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • 50 வருஷமா செய்யாதவங்க.. அடுத்த 5 வருஷத்துலயும் செய்யமாட்டார்கள் - திராவிட கட்சிகள் மீது சீமான் விமர்சனம்

50 வருஷமா செய்யாதவங்க.. அடுத்த 5 வருஷத்துலயும் செய்யமாட்டார்கள் - திராவிட கட்சிகள் மீது சீமான் விமர்சனம்

சீமான்

சீமான்

 விலையில்லாத பொருட்கள் தருகிறோம் எனக் கூறுபவர்கள் விலை கொடுத்துதான் பொருட்களை வாங்கித் தருகின்றனர்.

  • Share this:
தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் நல்லது செய்யவில்லை.  இனிவரும் 5 ஆண்டுகளிலும்  செய்ய மாட்டார்கள் என நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நாம்தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம. அரவிந்தனை ஆதரித்துப் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.தேர்தல் பரப்புரையில் பேசியதாவது ‘நாம்தமிழர் கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன் இலவச திட்டங்கள் முற்றிலும் நிறுத்தப்படும். மாறாக மக்களே தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொள்வதற்கு உரிய பொருளாதார திட்டங்கள் நிறைவேற்றப்படும். விலையில்லாத பொருட்கள் தருகிறோம் எனக் கூறுபவர்கள் விலை கொடுத்துதான் பொருட்களை வாங்கித் தருகின்றனர். அதற்கான நிதி ஆதாரம் முழுமையும் மக்களின் வரிப்பணத்திலிருந்து  செலவிடப்படுவதை இனியும் ஏற்க முடியாது.

மக்கள் பணத்தை எடுத்து இலவசப் பொருட்களை வழங்குவது ஏமாற்று வேலை.  மக்களுக்கு அறிவு வளத்தை கொடுப்பதே ஒரு நல்ல அரசின் கடமை. அந்த அடிப்படையில் அறிவு சார்ந்த கல்வியை இலவசமாக வழங்க நாம் தமிழர் கட்சி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.  விளைவிக்கின்ற பொருளை விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து கொள்கின்ற உரிமை விவசாயிகளுக்கு வழங்கப்படும். தற்போது தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தாலும் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப் படுவதில்லை. மாறாக திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி முழுமையும் பதுக்கப்படுகின்றன.

குடிதண்ணீரை கூட காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு திராவிட கட்சிகள் மக்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். இதுபோன்ற அவலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். கனிமவளம், கடல்வளம், சுற்றுச்சூழல், மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.50 ஆண்டு காலமாக தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் ஆண்டுள்ளனர். இத்தனை ஆண்டுகள் செய்யாத ஒரு நல்லதை வரும் ஐந்தாண்டுகளில் எவ்வாறு செய்து முடிப்பார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.இந்த முறையாவது நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: