Home /News /politics /

Tamil Nadu Election Result 2021: ’அறம் சீறும் சனாதனம் வீழும்’ திருமாவளவன் ட்வீட்

Tamil Nadu Election Result 2021: ’அறம் சீறும் சனாதனம் வீழும்’ திருமாவளவன் ட்வீட்

திருமாவளவன்

திருமாவளவன்

இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக தேர்தல் களத்தை சனாதன சக்திகளுக்கு எதிராக திருப்பியதில், விடுதலை சிறுத்தைகளின் பங்கு முதன்மையானது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக - பாமக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் - விசிக - கம்யூனிஸ்ட்டுகள் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.



    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக தேர்தல்களத்தைச் சனாதன சக்திகளுக்கு எதிராகத் திருப்பியதிலும், தலித் மக்களை பெருவாரியாக அதிமுக-பாஜக அணிக்கு எதிராகத் திரட்டியதிலும் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு முதன்மையானது! சனாதனிகளை வீழ்த்துவதும், விரட்டியடிப்பதுமே நமக்கான வெற்றி. அறம் சீறும் . சனாதனம் வீழும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Thol. Thirumavalavan

    அடுத்த செய்தி