மநீம திட்டத்தை காப்பி அடித்த திமுக... ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன்

மநீம திட்டத்தை காப்பி அடித்த திமுக... ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன்

கமல்ஹாசன்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல், தங்களது திட்டத்தை அறிவித்து வருவதாக சாடினார்.

  • Share this:
    திமுகவின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்ட அறிவிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

    தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக-வின் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. இதற்கு 350 ஏக்கர் பரப்பளவில் ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்பத் தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்ட அவர், ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    திமுக-வின் இந்த அறிவிப்புகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட மிண்ட் தங்க சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல், தங்களது திட்டத்தை அறிவித்து வருவதாக சாடினார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று அறிவித்ததை, திமுக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பதாக விமர்சித்தார். அத்துடன், ஸ்டாலினின் 7 உறுதிமொழி உட்பட அனைத்தையும் காப்பி அடிப்பதாகவும், மக்கள் நீதி மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று, துண்டு சீட்டாக மாறி வருவதாகவும் கமல் குறைகூறினார்.
    Published by:Vijay R
    First published: