மநீம முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் - கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த 2 கூட்டணி கட்சிகளுடன் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  இந்நிலையில் மக்கள் நீதி மய்ய கூட்டணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ரவி பச்சமுத்து மற்றும் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், தேமுதிக-வுக்கு பொன்ராஜ் அழைப்பு விடுத்ததை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். நல்லவர்கள் யாராக இருந்தாலும் மநீம கூட்டணியில் சேரலாம். நாங்கள் மூன்றாவது அணி அல்ல, முதல் அணி என்றார்.

  இதனிடையே அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக-வை மக்கள் நீதி மய்யம் கூட்டணி அழைக்க கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
  Published by:Vijay R
  First published: