மநீம கூட்டணியில் சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 34 தொகுதிகள் ஒதுக்கீடு - தகவல்

கமல்ஹாசன்-சரத்குமார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்தன.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாய கட்சிக்கு தலா 34 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் தவிர்த்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பிற கட்சிகளுடன் கூட்டணிகள் வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்தன. கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என்றும் சரத்குமார் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மநீம தொடங்கியது. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



    அதன்படி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 34 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து விரைவில் எந்ததெந்த தொகுதிளில் போட்டியிடுவது குறித்து ஆலோசனையில் நடைபெற உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
    Published by:Vijay R
    First published: