நரிக்குறவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்..!
MK Stalin | சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாள்தோறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூற்றுக்கணக்கானோரை சந்தித்து வருகின்றனர்.

நரிக்குறவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட மு.க.ஸ்டாலின்
- News18 Tamil
- Last Updated: November 28, 2020, 6:13 PM IST
அண்ணா அறிவாலயத்தில் வருகை தந்திருந்த நரிக்குறவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முகக்கவசத்தை கழற்றி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருச்சி மாவட்டம் தேவராயர்நேரியில் உள்ள நரிக்குறவர் காலனியினை சேர்ந்த நான்கு பேர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயம வருகை தந்திருந்தனர். அவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் 285 நரிக்குறவர் வீடுகள் உள்ளது, அவை அனைத்தும் கலைஞர் இருக்கும் காலத்தில் கட்டி கொடுக்கப்பட்டது. 45 வருடங்கள் ஆகி விட்டதால். அவை தற்போது மழை காரணமாக சேதமடைந்து வருகிறது.
அதனை புதுப்பித்து தரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார் என தெரிவித்தனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுக்கும் போது முககவசத்தினை அகற்றி விட்டு புகைப்படம் எடுக்குமாறு கேட்டோம். அதற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் சம்மதித்து முக கவசத்தினை அகற்றிவிட்டு எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என மகிழ்ச்சியாக தெரிவித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாள்தோறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூற்றுக்கணக்கானோரை சந்தித்து வரும் நிலையில் அவர்களுடன் முகக்கவசம் அணிந்து மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
திருச்சி மாவட்டம் தேவராயர்நேரியில் உள்ள நரிக்குறவர் காலனியினை சேர்ந்த நான்கு பேர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயம வருகை தந்திருந்தனர். அவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் 285 நரிக்குறவர் வீடுகள் உள்ளது, அவை அனைத்தும் கலைஞர் இருக்கும் காலத்தில் கட்டி கொடுக்கப்பட்டது. 45 வருடங்கள் ஆகி விட்டதால். அவை தற்போது மழை காரணமாக சேதமடைந்து வருகிறது.
அதனை புதுப்பித்து தரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார் என தெரிவித்தனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுக்கும் போது முககவசத்தினை அகற்றி விட்டு புகைப்படம் எடுக்குமாறு கேட்டோம். அதற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் சம்மதித்து முக கவசத்தினை அகற்றிவிட்டு எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.