’நம்பிக்கை துரோகத்தால் அதிகாரத்துக்கு வந்த ஈபிஎஸ், என்னை விமர்சிக்க அருகதை இல்லை’ - ஸ்டாலின் காட்டம்

Youtube Video

அரசு அலுவலகங்களில் நடத்தியதுபோல், ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

  • Share this:
அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மாவட்டந்தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவினர் மத்தியில், காணொலி மூலம் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசுகையில், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். அத்துடன், நம்பிக்கை துரோகத்தால் அதிகாரத்துக்கு வந்த ஈபிஎஸ்- தன்னை விமர்சிக்க தார்மீக அருகதை இல்லை என்று காட்டமாக சாடினார்.

மேலும், தமிழகத்தில் ஆர்டிஓ, பத்திரப்பதிவு, போக்குவரத்து துறை உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் நிலையில், ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

இரண்டாயிரம் மினி கிளினிக் தொடக்கம் என்று தமிழக அரசு அறிவித்து விட்டு, அதற்கான கட்டமைப்பை உருவாக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். எனவே, இதுஒரு மினி கிளினிக் நாடகம் எனவும் விமர்சித்தார்.
Published by:Yuvaraj V
First published: