மு.க. ஸ்டாலினால் கண்டிப்பாக முதல்வராக முடியாது - ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி கடும் விமர்சனம்

Youtube Video

மு.க.ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்று ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

  • Share this:
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தோ்தலின்போது தலைமைக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். பின்னர், கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற தயார் என்றும் சூசகமாக அறிவித்து இருந்தார். எந்த வித பதிலும் திமுக தரப்பில் கிடைக்க வில்லை. எனவே, வருகிற சட்டசபை தேர்தலில் தனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும் என கடந்த வாரம் கூறியிருந்தார் .

இந்த நிலையில் தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக, ஆதரவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளாா். இதற்காக மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதலே அழகிரியின் ஆதரவாளர்கள் திரளத்தொடங்கினர். ஆறு மணிக்கு மேல் மண்டபத்துக்கு வருகை தந்த மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் பேசத் தொடங்கினார்.

அப்போது அவர், ‘திருமங்கலம் இடைத் தேர்தலிலின்போது மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோர் மதுரையிலுள்ள என் வீட்டிற்கு வந்தனர். அப்போது அப்பாவிடம் சொல்லி பொருளாளர் பதவி கொடுக்கச் சொன்னார்கள். அப்பாவிற்கு போன் செய்தேன். மாலையில் மு.க.ஸ்டாலின் பொருளாளர் ஆனார். முரசொலி நிர்வாகத்திற்காக நான் 1980 ல் மதுரை வந்தேன். பி.டி.ஆர் மதுரை வரும் வழியில் இறந்து விட்டார் அப்போது நடந்த இடைத் தேர்தலில் கவுஸ் பாட்சா வெற்றி பெற்றார். திருமங்கலம் இடைத் தேர்தலை உலகமே வியந்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் நீங்கள் தான் வேலை பார்க்க வேண்டும் என கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டனர். அங்கு வெற்றி பெற்றோம். அங்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றோம் என கூறினர். பார்முலா இல்லை. கடின உழைப்பு. தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியை வேண்டாம் என கூறினேன். அப்பாவுக்கு பிறகு நீ தான் முதல்வர் என்று நானே மு.க.ஸ்டாலினிடம் கூறினேன்.

ஆனால் நான் இன்று கட்சியில் இல்லை. நான் என்ன தப்பு செய்தேன். மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது. என்னை பொதுக்குழுவை வருக என ஒரு நிர்வாகி போஸ்டர் ஒட்டினர். இது தவறா? மு.க.ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே.. வருக என போஸ்டர் ஒட்டி உள்ளனர். கண்டிப்பாக மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது’ என்று காட்டமாக பேசியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: