அதிமுக அரசு பத்து ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளையும், அக்கிரமங்களையும் செய்துள்ளது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக அரசு பத்து ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளையும், அக்கிரமங்களையும் செய்துள்ளது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசு பத்து ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளையும், அக்கிரமங்களையும் செய்துள்ளதாக சாடினார். எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கி, அரசு பணத்தை கொள்ளையடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

 • Share this:
  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தீவுர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவ்வகையில், எடப்படி பழனிசாமி ஊர்ந்து வளர்ந்தவர் என்றும் தான் படிப்படியாக வளர்ந்து வந்தவன் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

  கன்னியாகுமாரி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தக்கலை பகுதியில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக் கூடிய இயக்கம் என குறிப்பிட்டார். ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த, பாஜகவின் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

  தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அதிமுக அரசு பத்து ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளையும், அக்கிரமங்களையும் செய்துள்ளதாக சாடினார். எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கி, அரசு பணத்தை கொள்ளையடித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டும், முதலமைச்சர் ஏன் ஆஜராகவில்லை எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்
  Published by:Ram Sankar
  First published: